எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் |
கமல்ஹாசனின் கனவு படம் 'மருதநாயகம்'. இந்த படத்தை பிரிட்டிஷ் மகாராணி தொடங்கி வைத்தார். ஆனால் படத்தின் பட்ஜெட் காரணமாக 30 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படம் டிராப் ஆனது. ஆனாலும் மருதநாயகத்தை எப்படியாவது கொண்டு வருவேன் என்று கமல் அடிக்கடி கூறிவந்தார். தற்போது சினிமாவில் மொழி எல்லைகள் விரிந்து ஆயிரம் கோடியை தாண்டிய பட்ஜெட்டில் படங்கள் உருவாக தொடங்கி உள்ளது. இதனால் கமலும் தனது மருதநாயகத்தை மீண்டும் தட்டி எழுப்பியிருக்கிறார்.
படத்தை ஹாலிவுட்டில் தயாரித்தால் உலக அளவிலான மார்கெட்டிங் சாத்தியம் என்பதை உணர்ந்த கமல் இதுகுறித்து தற்போது இந்தியா வந்துள்ள மெக்சிகோ இயக்குனர் அல்போன்சா குயூரனை தனது அலுவலத்திற்கு அழைத்து வந்து இது குறித்து ஆலோசனை நடத்தினார்.
அல்போன்சா புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர். தனது கிராவிட்டி, ரோமா படங்களுக்காக ஆஸ்கர் விருது பெற்றவர். இந்த சந்திப்பின் போது மருதநாயகம் படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள், மேக்கிங் வீடியோவை அல்போன்சாவுக்கு காட்டி உள்ளார் கமல். இந்த சந்திப்பின் போது இயக்குனர் மணிரத்னம், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் சித்தார்த், நடிகை அதிதிராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இது குறித்து தனது சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள கமல், “நாங்கள் சினிமா பற்றி மட்டுமே பல மணி நேரம் பேசினோம். நான் மதிய உணவின் போது மாம்பழங்களை அவருக்கு அளித்தேன். அப்போது சித்தார்த், 'அல்போன்சாவுக்கு பங்கனப்பள்ளி மாம்பழம் கிடைத்திருக்கிறது' என்று கிண்டல் செய்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.