ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கிரைம் திரில்லர் படங்கள் என்பது இந்தக் காலத்தில் அதிகம் ரசிக்கப்படும் ஒரு படமாக இருக்கிறது. எந்த மொழிப் படங்களாக இருந்தாலும் ஓடிடி தளங்களில் அம்மாதிரியான படங்களைத்தான் அதிகம் பார்க்கிறார்கள் என்ற ஒரு தகவலும் உண்டு.
தமிழ் சினிமாவில் 70 வருடங்களுக்கு முன்பே அதிரடியான ஒரு கிரைம் திரில்லர் படத்தை வெளியிட்டுள்ளார்கள். அப்படத்தின் பெயர் 'அந்த நாள்'. அப்படம் வெளியாகி இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. பிரபல வீணை இசைக்கலைஞரான எஸ்.பாலசந்தர் இயக்கிய படம். சிவாஜிகணேசன், பண்டரிபாய் மற்றும் பலர் நடித்த படம்.
பிரபல ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசோவாவின் 'ரசோமன்' படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. ஏவிஎம் நிறுவன தயாரிப்பாளர் ஏவி மெய்யப்பன், ஜப்பான் சென்றிருந்த போது அந்தப் படத்தைப் பார்த்தார். அப்படியான புதுமையுடன் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
இப்படத்தில் கதாநாயகன் சிவாஜி கதாபாத்திரம் வெளிநாட்டு உளவாளி. அவரது மனைவி பண்டரிபாய் நாட்டுப்பற்று மிக்கவர். கணவன் சிவாஜியைக் கொன்றதற்காக நீதிமன்றக் கூண்டில் பண்டரிபாய் நிற்பார். சாட்சிகள் என்ன நடந்தது என்பதைச் சொல்லும் பாணியில் படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும்.
தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம். சிவாஜியின் காதலியாக சூர்யகலா, சிஐடி அதிகாரியாக படத்திற்குக் கதை எழுதிய ஜாவர் சீதாராமன் நடித்திருந்தார்கள்.
சுமார் 20 நாட்களுக்குள் எடுத்து முடிக்கப்பட்ட படம். ஆனால், வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும் தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறப்பான முதல் திரில்லர் படம் என்ற பெருமையை 70 ஆண்டுகளுக்குப் பிறகும் இப்படம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.