டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருக்கும் ஹீரோக்களான ரஜினி - கமல் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் அதற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த எம்ஜிஆர் - சிவாஜி இருவரும் கூண்டுக்கிளி என்கிற ஒரே ஒரு படத்திலும், இப்போதைய காலகட்டத்தில் விஜய் - அஜித் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்கிற ஒரே ஒரு படத்திலும் மட்டும் இணைந்து நடித்துள்ளனர். இந்த ராஜாவின் பார்வையிலே படத்தை இயக்கியவர் ஜானகி சவுந்தர். தயாரித்தவர் சவுந்தர பாண்டியன்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் உடனான அனுபவங்கள் குறித்து சவுந்தர பாண்டியன் பகிர்ந்து கொண்டபோது, கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அதாவது ஜில்லா படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் தன்னையும் இன்னும் ஐந்து தயாரிப்பாளர்களையும் ஒன்றாக ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்த விஜய் ஆளுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் உதவித்தொகையாக கொடுத்தார் என்கிற தகவலை தற்போது தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல அந்த சமயத்திலேயே இதுபோன்று சில தயாரிப்பாளர்களை ஒன்றிணைத்து ஒரு படம் நடித்துக் கொடுக்குமாறு அதன்மூலம் நாங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவோம் என்று கோரிக்கை வைத்ததாகவும் அதற்கு விஜய் பதில் ஏதும் கூறாமல் சிரித்துக் கொண்டே நகர்ந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் விஜய்யின் கடைசி படத்தில் இது போன்று அவர் செய்தால் தங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் பலருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.




