நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
சூர்யாவும் அவருக்குத் திருப்புமுனை தந்த இயக்குனர்களும், அந்த இயக்குனர்களுக்கு பதிலுக்கு 'திருப்பு' முனை தந்த சூர்யாவும் எனவும் பேசலாம் போலிருக்கிறது.
காதல் நாயகனாக வலம் வந்த சூர்யாவுக்கு 'நந்தா' படம் மூலம் ஒரு 'டெரர்' லுக்கைத் தந்து அவரை அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியவர் இயக்குனர் பாலா. அதற்குப் பிறகு 'காக்க காக்க' படத்தின் மூலம் அந்த மாற்றத்தை முன்னேற்றியவர் இயக்குனர் கவுதம் மேனன். அதற்கும் பிறகு மாற்றம், முன்னேற்றம், வசூல் என 'சிங்கம்' படம் மூலம் உயர்த்தியவர் இயக்குனர் ஹரி.
அவர்கள் வாங்கித் தராத தேசிய விருதை நடிப்புக்காகவும், தயாரிப்புக்காகவும் 'சூரரைப் போற்று' படம் மூலம் சூர்யாவுக்கு வாங்கித் தந்தவர் இயக்குனர் சுதா கொங்கரா.
மேலே, சொன்ன நால்வரும் சூர்யாவுடன் இணைந்து பணிபுரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டு அந்தப் படங்கள் 'டிராப்' ஆன வரலாற்றில் ஒன்றாகி உள்ளனர்.
சூர்யா - கவுதம் மேனன் கூட்டணியில் 'துருவ நட்சத்திரம்', சூர்யா - ஹரி கூட்டணியில் 'அருவா', சூர்யா - பாலா கூட்டணியில் 'வணங்கான்' ஆகிய படங்கள் டிராப் ஆகின. அந்த வரிசையில் சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியின் 'புறநானுறு' படமும் இணைந்து விட்டது என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். படத்திற்கான இறுதி வடிவத்தை சூர்யாவிடம் சுதா தந்ததாகவும், அது சரியில்லை என சூர்யா நிராகரித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.
அதனால்தான் அந்தப் படத்திற்கான தேதிகளை என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நிலையில் கார்த்திக் சுப்பராஜ் சொன்ன கதை பிடித்துப் போக அப்படத்தின் அறிவிப்பு வந்ததாம். சூர்யாவுக்காக மீண்டும் வேறொரு கதையை சுதா எழுதுவாரா அல்லது அவர் எழுதிய கதைக்கு வேறொரு ஹீரோவைத் தேடுவாரா என்பது விரைவில் தெரிய வரும்.