டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகை குஷ்பு தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார். நடைபெற்று வரும் பார்லிமென்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு உடல்நல பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கட்சி தலைமைக்கு எழுதியுள்ள கடித்தில் கூறியிருப்பதாவது:
வாழ்க்கை கணிக்க முடியாதது. நாம் சிறந்த நிலையில் இருக்கிறோம் என உணரும்போது, அது நம்மை சோதிக்கும். 2019ல் டில்லியில் ஏற்பட்ட விபத்தில் எனக்கு முதுகு தண்டுவடத்தின் கீழ் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த காயம் கடந்த 5 ஆண்டுகளாக என்னை துன்புறுத்துகிறது. இதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறேன்.
எனது மருத்துவ குழுவினர், என்னை பிரசாரங்களில் ஈடுபட வேண்டாம் என்று கண்டிப்புடன் அறிவுறுத்தினர். பிரசாரம் செய்தால் உங்கள் நிலை மோசமடையும் என்று தெரிவித்தார்கள். ஆனால், டாக்டர்களின் அறிவுரையை மீறி வலியையும், வேதனையையும் தாங்கிக் கொண்டு பிரசாரம் செய்து உழைத்தேன்.
தற்போது உடல் நிலை மோசமடைந்துள்ளது. தேர்தல் பிரசாரம் என்பது நீண்டநேரம் அமர்ந்து இருப்பது, நீண்ட பயணங்களை மேற்கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த 2 விஷயங்களையும் தேர்தல் பிரசாரத்தில் தவிர்க்க முடியாது. மருத்துவர்களின் ஆலோசனையை மீறி செயல்பட்டால் பாதிப்பு ஏற்படும் என்பதால் தேர்தல் பிரசாரத்தில் என்னால் பங்கேற்க முடியாது என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உடல்நலம் பெற்று மீண்டும் திரும்புவேன். பிரதமர் மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்பதைக் காண ஆவலுடன் இருக்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.




