ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுனுக்கு இன்று பிறந்தநாள். அதை முன்னிட்டு 'புஷ்பா 2' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் வெளியான படத்தின் போஸ்டரில் உள்ள அதே கெட்டப்பில் இந்த வருட பிறந்தநாளில் டீசரை வெளியிட்டுள்ளார்கள். எதிர்பார்த்ததைப் போலவே அதிரடி ஆக்ஷனுடன் கூடிய மிரட்டலான டீசராகவே அமைந்துள்ளது.
கோவில் திருவிழாவில் விதவிதமான வேடங்களை அணிந்த சிலர் புஷ்பாவை அடிக்க வர, அவர்களைப் போலவே கோவில் திருவிழாவுக்காக 'காளி' போன்ற வேடமணிந்த புஷ்பா அவர்களை அடிக்கும் ஒரு நிமிட வீடியோவாக டீசர் உள்ளது.
புடவை அணிந்து, காலில் சலங்கை, கையில் வளையல்கள், கழுத்தில் எலுமிச்சை மாலை, மல்லிப்பூ மாலை, கழுத்து நிறைய அணிகலன்கள், முகத்தில் வண்ண வண்ண அலங்காரம் என அதிரடியாய் நடந்து வந்து ஆர்ப்பரிக்கிறார் அல்லு அர்ஜுன்.
படம் முழுவதுமே இப்படி அதிரடியாகவே இருக்கும் என்பதை ஒரு சண்டைக் காட்சியின் ஒரு டீசராக வெளியிட்டுள்ளார்களோ என யோசிக்க வைக்கிறது. சில நிமிடங்களிலேயே லட்சங்களைக் கடந்து ஏறிக் கொண்டிருக்கிறது டீசரின் பார்வைகள். புதிய சாதனையைப் படைக்குமா எனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.