ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
பரசுராம் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் மற்றும் பலர் நடிப்பில் உருவான 'பேமிலி ஸ்டார்' தெலுங்குப் படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, படம் குறித்து பல நெகட்டிவ்வான கருத்துக்களை வேண்டுமென்றே சிலர் பதிவிடுவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் தேவரகொண்டாவின் மேனேஜர் அனுராக் பர்வதனேனி, விஜய் தேவரகொண்டா ரசிகர் மன்றத் தலைவர் நிஷாந்த்குமார் இது குறித்து புகார் அளித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் உள்ள சில குரூப்கள், சில கணக்குகள் ஆகியவற்றின் ஸ்கிரீன் ஷாட் உடன் அந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படத்திற்கான எதிர்மறை விமர்சனங்கள் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜுவும் கருத்து தெரிவித்துள்ளார். “சில நெகட்டிவ்வான விமர்சனங்களால்தான் ஒரு தரப்பு ரசிகர்கள் படத்திற்கு வரவில்லை. அந்த நெகட்டிவ் விமர்சனங்கள், அந்த முட்டாள்தனமான விமர்சனங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கேரளாவில் படம் வெளியான மூன்று நாட்கள் வரை விமர்சனங்கள் போடக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அது போல இங்கும் வர வேண்டும். அப்படி வரவில்லை என்றால் திரையுலகம் வாழ முடியாது,” எனக் கூறியுள்ளார்.
தில் ராஜுவின் இந்தக் கருத்து தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.