புலவர் பெருந்தலை சாத்தனாராக நடித்த கொட்டாச்சி | விஜயகாந்த் மகனுக்கு விஜய், லாரன்ஸ் உதவினார்களா? | ஒரே நேரத்தில் 5 படங்களா? : சிம்பு விளக்கம் அளிப்பாரா | இன்று ஸ்ரீலீலாவுக்கு பிறந்தநாள் : ரசிகர்கள் வாழ்த்து | தக் லைப் : ஓடிடி விலை, மறுபரிசீலனை பேச்சுவார்த்தை? | நானியை சந்தித்த 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் | ‛கலைமாமணி' பட்டம் பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார் | டாப் இயக்குனர்களுடனான கூட்டணி சரிவு : கவனிப்பாரா கமல்ஹாசன் ? | ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு |
விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை அடைத்த லைகா நிறுவனம், கடனை திருப்பி செலுத்தும் வகையில் விஷால் நடிக்கும் படத்தின் சம்பளம், அவர் தயாரிக்கும் படத்தின் உரிமைகளை தர வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டிருந்தது. இந்த ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாததால் லைகா நிறுவனம் விஷால் மீது வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக விஷால் தற்போது நடித்து வரும் 'ரத்னம்' படத்திற்காக விஷாஷக்கு வழங்க வேண்டிய 2 கோடியே 60 லட்சம் சம்பள நிலுவை தொகையை நீதிமன்றத்தில் செலுத்துமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஷாலின் மனுவுக்கு பதிலளிக்க லைகா நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. விசாரணை இன்றும் தொடர்ந்து நடக்கிறது.
விஷால் நடிக்கும் 'ரத்னம்' படத்தை ஹரி இயக்குகிறார். ஸ்டோன் பென்ஞ் நிறுவனம் தயாரிக்கிறது. விஷாலுடன் பிரியா பவானி சங்கர், சமுத்திரகினி, கவுதம் மேனன், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் வருகிற ஏப்ரல் 26ம் தேதி வெளியாகிறது. இந்த படத்திற்காக விஷாலுக்கு 5 கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.