ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாள திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட இவர், மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் நீண்ட நாட்களாகவே படம் இயக்கும் எண்ணம் அவரது மனதில் இருந்தது. அதற்கு உயிர் கொடுக்கும் விதமாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு 'பரோஸ்' என்கிற வரலாற்று படத்தை இயக்கத் துவங்கினார் மோகன்லால். இதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் மலையாள திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் மோகன்லால். அவருக்கு இயக்குனர் சங்க உறுப்பினர் அட்டை தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஒரு சங்கத்தில் சேர்ந்த புதிய உறுப்பினர் எந்த அளவிற்கு மகிழ்ச்சியுடன் அதை பகிர்ந்து கொள்வாரோ அதே மகிழ்ச்சியுடன் தனது உறுப்பினர் அட்டையை சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார் மோகன்லால்.