சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழக ரசிகர்கள் சென்னை அணியின் ஒவ்வொரு வெற்றியையும் எதிர்பார்க்க துவங்கி விட்டார்கள். அவர்களை ஏமாற்றாமல் சென்னை அணியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் அணியுடன் மோதி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் குஜராத் அணியுடன் மோதி நேற்று மீண்டும் இன்னொரு வெற்றியை ருசித்தது.
சென்னை அணிகள் மோதும் போட்டிகளில் எல்லாம் அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பெரும்பாலும் நேரடியாக கலந்து கொண்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிஸியாக நடித்து வரும் நடிகர் சூரி நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியை காண்பதற்கு நேரிலேயே வருகை தந்திருந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கிரிக்கெட்டை பார்த்து ரசிப்பது இதுதான் முதன்முறை. இந்த நிகழ்வில் அவருடன் லைக்கா நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் தமிழ்க்குமரன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை நேரில் கண்டு ரசித்தது குறித்து தனது மகிழ்ச்சியை சூரி வெளிப்படுத்தும்போது, “முதல் முறை சேப்பாக்கம் மைதானத்தில்.. அற்புதமான ரசிகர்கள்.. சென்னை என்றாலே தனி கெத்து தான்.. நம்ம ஆளுங்க மைதானத்தில் பட்டைய கிளப்புறாங்க.. தல தோனியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.