சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

எண்பது, தொண்ணூறுகளின் காலகட்டத்தில் ரஜினி, கமல் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படங்களை இப்போது பலர் ரீமேக் செய்ய விரும்பினாலும் அவர்களுக்கு கிடைப்பதென்னவோ அந்த படங்களின் டைட்டில்கள் மட்டும் தான்.. காரணம் ஒரிஜினலை சிதைத்து விடக்கூடாது என்பதால் யாருக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பதில்லை. இதற்குமுன் ரஜினிகாந்த் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான தில்லு முல்லு ரீமேக் ஆன விஷயத்தை உதாரணமாக குறிப்பிடலாம். இந்த நிலையில் கமல் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற கிளாசிக் படமான சத்யாவை ரீமேக் செய்ய இருக்கிறார்கள் என்கிற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
இதில் சத்யா கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் நடிக்கிறார் என்றும் அசோக் செல்வனை வைத்து போர் தொழில் படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் ராஜா தான் இந்த படத்தை இயக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது விரைவில் சத்யா பட தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
1988ல் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா முதல் முறையாக தமிழில் சத்யா படம் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகமானார். ஆக்ஷன் படமாக உருவாகி இருந்த இந்த படத்திற்கு இளையராஜாவின் இசை இன்னும் அற்புதமாக உயிரூட்டியது குறிப்பிடத்தக்கது.