ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. வரலாற்று பின்னணி கொண்ட கதையாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவில் முடிந்துவிட்ட நிலையில் இன்னொரு பக்கம் படத்தில் அதிகம் இடம் பெறக்கூடிய விஎப்எக்ஸ் காட்சிகளுக்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ விஎப்எக்ஸ் காட்சிகளுக்காக பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள புலி சம்பந்தப்பட்ட காட்சி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் தயாரிப்பாளரும், கங்குவா படக்குழுவினருடன் இணைந்து செயல்படுபவருமான தயாரிப்பாளர் தனஞ்செயன் இது குறித்து கூறும்போது, “இந்த புலி சம்பந்தப்பட்ட காட்சி முழுவதுமே விஎப்எக்ஸ்-ல் உருவாக்கப்படவில்லை. புலிமுருகன் படத்தில் மேற்கொள்ளப்பட்டது போல நிஜமான புலியை, அதன் அசைவுகளை தத்ரூபமாக படம் பிடித்து அதை வைத்து விஎப்எக்ஸ் பணிகளை மேற்கொண்டதால் தான் இந்த அளவிற்கு அது நிஜமானது போல அனைவரையும் கவர்ந்துள்ளது” என்று கூறியுள்ளார்.