‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் |

இந்தியன் 2 படத்தை முடித்துள்ள நடிகர் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கி வரும் தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் தன்னை வைத்து அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், ராஜ்பார்வை போன்ற படங்களை இயக்கிய, சிங்கீதம் சீனிவாச ராவ்விற்கு ‛அபூர்வ சிங்கீதம்' என்ற பெயரில் ஒரு பாராட்டு விழா நடத்தினார் கமல். இந்த நிகழ்ச்சியில் மணிரத்னம், வைரமுத்து, சுஹாசினி, சந்தானபாரதி, நடன மாஸ்டர் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நடன மாஸ்டர் சுந்தரத்துடன் ஒற்றைக் காலில் நின்றபடி எடுத்த ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் தற்போது வெளியிட்டுள்ளார் கமல். அதில் கேப்ஷனாக, ‛‛அண்ணாத்த ஆடுறார்..., அபூர்வ சிங்கீதம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுந்தரம் மாஸ்டருடன் ஒற்றைக்காலில் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன்'' என்று பதிவிட்டு இருக்கிறார்.
டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், நடிகர்கள் மற்றும் நடன இயக்குனர்களான பிரபுதேவா, ராஜ சுந்தரம், நாகேந்திர பிரசாத் ஆகியோரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.