ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

நடிகை சாய் தன்ஷிகா தமிழில் மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இது அல்லாமல் சில மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தி ப்ரூப் என்ற புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடன இயக்குனர் ராதிகா இந்த படத்தை இயக்கி உள்ளார். ரித்விகா, அசோக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகி வருகிறது. படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. அதில் சண்டைக் காட்சியில் ஒருவரது நெஞ்சில் தன்ஷிகா ஆவேசமாக கால் வைத்து நிற்பது போன்று அந்த போஸ்டர் காட்சி இடம் பெற்றுள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.