தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் கிரீஷ். நடிகை சங்கீதாவின் கணவரான இவர், விஜய்க்காக நண்பன், துப்பாக்கி, வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது பாடகர் கிரீஷ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு மொபைல் போனில் விஜய் இடத்தில் தான் ஆட்டோகிராப் வாங்கிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் பிரியமுடன் விஜய் என்று விஜய் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார். பாடகர் கிரிஷ் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.