சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
‛ஒருநாள் கூத்து, டிக் டிக் டிக்' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். சினிமா தாண்டி விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர். கார் ரேஸிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். அண்மையில் இவருக்கு தாராளமாக ஒரு நபர் பணம் செலவிட்டு வருவதாக சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ பரவியது. இதுதொடர்பாக நிவேதா வெளியிட்ட நீண்ட விளக்கம்...
சமீபகாலமாக எனக்கு பணம் தாராளமாக செலவிடப்படுவதாக தவறான செய்தி பரவுகிறது. இப்படி பேசுவர்கள் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கும் முன் மனிதநேயத்துடன் அந்த தகவலை சரிபார்ப்பார்கள் என அமைதி காத்திருந்தேன். கடந்த சில நாட்களாக நானும், எனது குடும்பமும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம். இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பும் முன் யோசியுங்கள்.
நான் மிகவும் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவள். நாங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக துபாயில் இருக்கிறோம். 16 வயதில் இருந்தே சுயமாக சம்பாதித்து வருகிறேன். சினிமாவில் 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். இதுவரை யாரிடமும் போய் வாய்ப்பு கேட்டது இல்லை. எல்லாம் தானாக அமைந்தது. பணத்தின் மீது பேராசை கொண்டதில்லை.
என்னைப்பற்றி வெளியான தகவல் எதுவும் உண்மையில்லை. 2002 முதல் துபாயில் வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம். 2013ல் இருந்து ரேஸில் எனக்கு ஆர்வம் உண்டு. சென்னையில் நடத்தப்படும் ரேஸ் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறேன். வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்த பிறகு ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன்.
உங்கள் குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களைப் போலவே நான் கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். நான் இதை சட்டரீதியாக எதிர்கொள்ளவில்லை. காரணம் இன்னும் பத்திரிகையில் கொஞ்சம் மனிதாபிமானம் உள்ளது. அவர்கள் என்னை இப்படி அவதூறு செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒரு குடும்பத்தின் நற்பெயரை கெடுக்கும் முன்பு அந்த தகவலை உறுதி செய்யும்படி பத்திரிகையாளர்களை கேட்டுக் கொள்கிறேன். எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.