அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். பிரபல ஊட்டச்சத்து மருத்துவரான இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக மகிழ்மதி இயக்கம் என்ற அமைப்பின் மூலம், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் தரமான ஊட்டச்சத்து உணவு இலவசமாக கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி அதற்காக சில பணிகளையும் செய்து வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலின் போது இவர் தி.மு.க.,வில் இணைவார் என பேசப்பட்டது. ஆனால் எந்த கட்சியிலும் சேராமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், திவ்யா சத்யராஜ்க்கு ஒரு கட்சியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து திவ்யா சத்யராஜ் கூறியதாவது: எனக்கு அரசியல் ஆர்வம் உண்டு. நான் எம்.பி.,யாக ஆசைப்படுகிறேனா எனக்காக என் தந்தை பிரசாரம் செய்வாரா என்றெல்லாம் பலரும் கேள்வி கேட்டனர். நான் பதவிக்காகவோ, தேர்தலில் ஜெயிக்கவோ அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கவில்லை. மக்களுக்கு வேலை செய்யவே அரசியலுக்கு வர நினைத்தேன். நான் மகிழ்மதி இயக்கம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகளாக களப்பணி செய்து வருகிறேன்.
இந்த அமைப்பின் மூலம், தமிழகத்தில் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படுகிறது. நான் தனிக்கட்சியும் ஆரம்பிக்கப் போவதில்லை. வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது. ஆனால் எனக்கு விருப்பம் இல்லை. எந்த கட்சியுடன் இணையப் போகிறேன் என்பதை லோக்சபா தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பேன். சத்யராஜின் மகளாகவும், தமிழ் மகளாகவும் தமிழகத்தின் நலன் காக்க உழைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.