'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? |
இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி தமிழில் ‛கில்லி, குருவி, உத்தமப்புத்திரன், தில், கஜினி' போன்ற படங்களின் மூலம் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
சமீபத்தில் ஆசிஷ் வித்யார்த்தி அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, "நான் எப்படி எதையும் யோசிக்காமல் எனக்கு பிடித்ததை செய்து வருகிறேன். அதேபோல் தான் விஜய்யும் அவரின் மனதிற்கு பிடித்ததை செய்து வருகிறார். அது அரசியல் என்பதால் தான் கேள்வி எழுப்புகிறோம். வேறு ஏதேனும் என்றால் இப்படி கேட்டிருக்க மாட்டோம். நாளை யாரேனும் நான் ஒரு யோகா சென்டர் திறக்கப்போகிறேன் என்றால் நாம் எதுவும் கூற மாட்டோம். விஜய் தன் மனதிற்கு பிடித்ததை செய்கிறார். அந்த எண்ணத்தை பாராட்டலாம்" என தெரிவித்துள்ளார்.