பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் |

நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் -1 என்ற படம் சமீபத்தில் திரைக்கு வந்த நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய அக்காள் மகள் திருமணம் குறித்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார் அருண் விஜய். அந்த புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகி வந்தது.
இந்த நேரத்தில் அருண் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து ஒரு யுடியூப் சேனலில் அவதூறான செய்திகளை வெளியிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அருண் விஜய் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.