பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
சென்னையில் பிறந்து வளர்ந்த தெலுங்கு பொண்ணு சிருகுரி மானசா சவுத்ரி. ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. முடித்துள்ளார். மானசாவின் கனவு எப்போதும் மாடலிங் மற்றும் நடிப்பை நோக்கியே இருந்தது. மாடலிங் உலகிற்குள் அவர் 16 வயதிலேயே நுழைந்தார். நீச்சல், ஸ்கேட்டிங், துப்பாக்கி சூடு மற்றும் நடனம் எனப் பல்வேறு திறமைகளை கொண்டுள்ளார். ரவிகாந்த் பெரும்பு இயக்கிய 'பப்பில்கம்' என்று தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது "தமிழ் படத்தில் அறிமுகமாகத்தான் விரும்பினேன் ஆனால் வாய்ப்பு கிடைத்தது தெலுங்கு படத்தில் என்றாலும் இப்போது தமிழ் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால் தமிழ் எனக்கு சரளமாக பேசத் தெரியும். நான் நடிக்கும் படங்களில் நானே தமிழில் டப்பிங் பேசவும் முடிவு செய்து இருக்கிறேன். நான் நடிக்கும் படம் பற்றிய முறையான அறிவிப்புகளை தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிடுவார்கள்" என்றார்.