வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், எந்த ஒரு புதிய மலையாள படத்தையும் தாங்கள் திரையிட போவதில்லை என்று போராட்டம் அறிவித்தது. மலையாளத்தில் ரிலீஸ் ஆகும் படங்களை எட்டு வாரங்கள் கழித்து தான் ஓடிடிக்கு கொடுக்க வேண்டும் என்பது திரையரங்கு உரிமையாளர்களின் நிபந்தனை. ஆனால் அதை மீறி பல தயாரிப்பாளர்கள் நான்கு வாரங்களிலேயே தங்களது படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். இதனால் தியேட்டர் வருமானம் பாதிப்பதாக கூறித்தான் இந்த போராட்டத்தை அறிவித்தனர்.
அதனால் இந்த போராட்டம் எப்போது முடியும் என தெரியாததால் ஒரு சில படங்கள் பிப்ரவரி 22ம் தேதியே வெளியாகின. அப்படி வெளியான படம் தான் தற்போது சூப்பர் ஹிட்டாக மாறி உள்ள 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக, அதிலும் குறிப்பாக இந்த பிப்ரவரி மாதம் வெளியான படங்கள் வாரத்திற்கு ஒன்றாக ஹிட் அடித்து ரசிகர்களை தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக வர செய்துள்ளன.
இதனை கவனித்த கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், ரசிகர்கள் ஆர்வமாக திரையரங்குகளை நோக்கி வரும் இந்த சமயத்தில் தேவையில்லாமல் போராட்டத்தை அறிவித்து வசூல் ரீதியான பின்னடைவை சந்திக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.. அதனால் வரும் வெள்ளியில் இருந்து வழக்கம் போல படங்கள் தியேட்டர்களில் வெளியாகும் என தெரிகிறது.