ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
உறியடி படத்தின் மூலம் இயக்குனர், நடிகர் ஆக அறிமுகமானார் விஜயகுமார். இதையடுத்து அவர் நடித்த உறியடி 2, பைட் கிளப் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதளவில் வெற்றியடையவில்லை. இதைத்தொடர்ந்து சேத்துமான் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தற்போது புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜயகுமார். ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கின்றார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார். அதன்படி படத்திற்கு ‛எலெக்ஷன்' என தலைப்பு வைத்து முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பட தலைப்பை பார்க்கையில் இது அரசியல் தொடர்பான கதைக்களமாக இருக்கலாம் என தெரிகிறது.