ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி உடல்நலக் குறைவால் திடீரென மரணமடைந்தார். அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது. தேனி, பண்ணைபுரத்தை அடுத்துள்ள லோயேர் கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை இல்லத்தில் பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் இளையராஜா சென்னை திரும்பினார். ஆனாலும், வேறு எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் அவரது இசைப் பணியை மீண்டும் ஆரம்பித்துள்ளார் இளையராஜா.
பிரபல கர்நாடக இசைப் பாடகரான சஞ்சய் சுப்பிரமணியம் இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து 'அது நடந்தது' என்று குறிப்பிட்டுள்ளார். கர்நாடக இசையில் பிரபல பாடகராக இருக்கும் சஞ்சய், சினிமாவில் இளையராஜா இசையில் பாடியிருப்பதைத்தான் பகிர்ந்துள்ளார் எனத் தெரிகிறது. அது சினிமா பாடலா அல்லது பக்திப் பாடலா என்பது குறித்து தகவல் இல்லை. இருப்பினும் இளையராஜா இசையில் சஞ்சய் சுப்பிரமணியம் பாடுவது குறித்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.




