மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
2026 சட்டசபைத் தேர்தலை சந்திப்பதற்காக நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். தற்போது நடித்து வரும் 'கோட்' படத்திற்குப் பிறகு அவரது 69வது படத்துடன் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக அப்போது வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.
'விஜய் 69' படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து அடிக்கடி ஏதாவது ஒரு இயக்குனர் பெயர் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் பிரபல தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் பெயரும் சேர்ந்துள்ளது. பவன் கல்யாண் நடித்த 'அத்தாரின்டிக்கி தாரேதி', அல்லு அர்ஜுன் நடித்த 'அலா வைகுந்தபுரம்லோ' உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் திரிவிக்ரம். இந்த வருட சங்கராந்திக்கு வெளிவந்த மகேஷ்பாபு நடித்த 'குண்டூர் காரம்' படத்தை இயக்கியிருந்தார்.
'பேமிலி சென்டிமென்ட் வித் ஆக்ஷன்' படங்களின் ஸ்பெஷலிஸ்ட் திரிவிக்ரம். விஜய்யின் கடைசி படத்தை இயக்கப் பொருத்தமானவர்தான். ஆனால், யாரை, எந்தக் கதையைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை விஜய் தான் முடிவு செய்வார். கடைசி படமாயிற்றே ?. அதுவரையில் இப்படியான தகவல்கள் வந்து கொண்டுதான் இருககும்.