மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' |

மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானாலும், விஜய் நடித்த 'பீஸ்ட்' படம் மூலம் தமிழில் பிரபலமானவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்துள்ளார். மும்பையில் செட்டிலாகியுள்ள பூஜா தற்போது 'தேவா' என்ற ஹிந்திப் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் தளத்தில் 26 மில்லியன் பாலோயர்களுடன் இருக்கும் பூஜா அவ்வப்போது அழகான, கிளாமரான புகைப்படங்களை தனது ரசிகர்களுக்காக பதிவிடுவார். இன்று மஞ்சள் நிறப் புடவையில் மங்களகரமாய் இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “த மங்களூரியன்' எனப் பதிவிட்டுள்ளார். அவரது உறவினரது திருமணத்தில் கலந்து கொள்ள அவர் மங்களூர் வந்த போது எடுத்துள்ள புகைப்படங்கள் அவை.
பூஜாவின் பெற்றோர் மங்களூருக்கு அருகிலுள்ள உடுப்பியைச் சேர்ந்தவர்கள். உடுப்பியைச் சேர்ந்தவர்களும் அவர்களை மங்களூர்க்காரர்கள் என்று சொல்லி அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.




