ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவிலும் பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் ஷங்கர். இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் இளைய மகள் அதிதி, சினிமா நடிகையாக வலம் வருகிறார்.
மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு 2022ல் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் உடன் திருமணம் நடந்தது. இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட் ஒன்றில் பிரமாண்டமாய் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் இவர்கள் ஆறு மாதங்கள் கூட சேர்ந்து வாழவில்லை.

ரோஹித்தின் கிரிக்கெட் கிளப்பில் 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். இதில் ரோஹித்தும் குற்றச்சாட்டிற்கு ஆளாக அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இந்த பிரச்னையில் ரோஹித், ஐஸ்வர்யா இருவரும் பிரிந்துவிட்டதாக தெரிகிறது. இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு தற்போது மறுமணம் முடிவாகி, நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவுக்கு நிச்சயமாகி உள்ளது. இவர்களின் போட்டோவை அதிதி தனது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளார். விரைவில் திருமணம் நடக்க உள்ளது.




