துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அயலான் படத்திற்கு பின் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்கமல் புரொடக்சன்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இது இந்திய ராணுவ பின்னனியில் நடைபெறும் கதை என்பதால் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது.
வருகின்ற பிப்ரவரி 16ம் தேதி இந்த படத்தின் தலைப்பை டீசர் வீடியோவின் மூலம் வெளியிடுவதாக நேற்று ஒரு வீடியோ மூலம் அறிவித்தனர். அந்த வீடியோவில் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் தன்னை தயார்படுத்திய விதம், உடற்பயிற்சி செய்த விஷயங்களை வீடியோவாக வெளியிட்டனர். இந்த படத்தின் தலைப்பு குறித்து நமக்கு கிடைத்த தகவலின் படி, இந்த படத்திற்கு 'சோல்ஜர்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.