ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

வெங்கட் பிரபு இயக்கும் ‛தி கோட்' படத்தில் விஜய் நடித்து வருகிறார். மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது.
இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தை ஒரு கேரக்டரில் காண்பிக்க விஜய்யும், வெங்கட் பிரபுவும் திட்டமிட்டுள்ளார்களாம். அதாவது ஏஐ என்ற தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தின் கேரக்டரை இந்த படத்தில் நடிக்க வைக்க போகிறார்களாம். இது குறித்து அவரது குடும்பத்தாரிடமும் விஜய்யும், வெங்கட் பிரபுவும் அனுமதி கேட்டபோது, விஜயகாந்த்தை இந்த படத்தில் எந்தமாதிரி ரோலில் காட்டப்போகிறீர்கள் என்பதை கேட்டறிந்த பிரேமலதா விஜயகாந்த், அவர் தோன்றும் காட்சிகளை இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பு எங்களிடத்தில் காட்டி நாங்கள் ஒப்புதல் கொடுத்த பிறகே அதை படத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்றும் ஒரு நிபந்தனை வைத்திருக்கிறாராம்.




