ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
திரைத்துறையில் பல கனவுகளுடன் கால் பதிக்க ஏராளமானோர் இன்றளவும் முயற்சித்து வருகின்றனர். ஒரு சிலர் வாய்ப்பு கிடைத்து அதனை பயன்படுத்தி நல்ல நிலைக்கு செல்கின்றனர், சிலர் வாய்ப்பு கிடைத்தும் அதனை பயன்படுத்தாமல் வீணடிப்பார்கள். ஆனால் பலர் வாய்ப்புகூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
திரைத்துறை எப்படியாவது ஜொலித்துவிடலாம் என்ற நிறைய கனவுகளுடன் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தவர் தான் திருமாறன். பல போராட்டங்களுக்கும் தேடல்களுக்கும் பிறகு உதவி இயக்குனர் வாய்ப்பு கிடைத்தது. எஸ்.வி.சேகர் இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளியான 'காலம் மாறிப்போச்சு' படத்தின் மூலம் இந்த வாய்ப்பு பெற்றார்.
உதவி இயக்குனராக இருந்த போதிலும் எழுத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தால் 1998ம் ஆண்டு வெளியான 'கோல்மால்' படத்தின் மூலம் பாடலாசிரியராக அவதாரம் எடுத்தார். அப்படத்தில் இடம்பெற்ற ‛ஹே பாப்பா, ஓ பாப்பா' மற்றும் ‛வாடா வான்னா' என்ற இரண்டு பாடல்களை எழுதினார். பின்னர் ராம.நாராயணன் இயக்கத்தில் வெளியான 'மாயா' படத்தில் இடம்பெற்ற ‛தத்தக்கா பித்தக்கா...' என்ற பாடலையும் எழுதி பிரபலமானார்.
ஒரு சில சமயங்களில் அவர் எழுதும் பாடல் வரிகளுக்கு அவரே மெட்டமைத்து அவரே பாடுவாராம். இந்த உண்மை தெரிந்த பலரும் அவரை பாட வைத்து அழகு பார்ப்பார்களாம். அப்படி அவரது பாடலை கேட்டு ரசித்தார் இசையமைப்பாளர் அந்தோணிதாசன். அந்த பாடலை தன்னுடைய 'போக் மார்லி ரெக்கார்ட்ஸ்' இசை லேபில் மூலமும் வெளியிடுவதாக கோரியுள்ளார். அதற்கு சம்மதிக்கவே அந்த பாடலை அந்தோணிதாசன் வெளியிட்டுள்ளார்.
77வது சுதந்திர தினத்தையொட்டி 'சுதந்திர தேசமே வந்தே மாதரம்' என்ற திருமாறனின் பாடல் அந்தோணிதாசன் இசையில், 'போக் மார்லி ரெக்கார்ட்ஸ்' யூடியூப் சேனலில் வெளியானது. அந்த பாடலை சித்ரா, சங்கர் மகாதேவன், ஜீவி பிரகாஷ்குமார், கேசவ் ராம், ஹஷ்வந்த், அந்தோணிதாசன், மீனாட்சி இளையராஜா, ரீத்தா அந்தோணிதாசன் மற்றும் குட்டிப்பாப்பா ரவுடி பேபி வர்ஷினி உள்ளிட்டோர் பாடி இருந்தனர்.
தேசப்பற்றை போற்றும் வகையில் அமைந்த இந்த பாடல் வரிகள் பலரின் கவனத்தையும் பெற்றது. இப்படி உதவி இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்டவராக விளங்கிய திருமாறன் திரைத்துறையில் நிலைநிறுத்தி கொள்ள படாதபாடுபட்டார். விரைவில் ஒரு படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நேரத்தில், உடல் நிலை சரி இல்லாமல் திடீரென உயிரிழந்தார். இந்த செய்தி திரைத்துறையை சேர்ந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமாறனுக்கு மனைவி மற்றும் மகள் உள்ள நிலையில் அவரின் இறுதி சடங்குகள் இன்று அம்பத்தூரில் நடைபெற உள்ளது.