அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
ஜெ 4 ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.ராஜரத்தினம் மற்றும் டி.ஜெபா ஜோன்ஸ் தயாரித்துள்ள படம் 'மிஸ்டர் ஜூ கீப்பர்'. ஜெ. சுரேஷ் இயக்கி உள்ளார். 'குக் வித் கோமாளி' மூலம் பிரபலமான நடிகர் புகழ் இதுவரை காமெடியனாக நடித்து வந்தார். முதல் முறையாக நாயகனாக நடிக்கும் படம் இது. ஒரு புலியை காப்பாற்ற போராடுபவரின் கதை. ஷிரின் காஞ்ச்வாலா நாயகியாக நடித்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் புகழ் பேசியதாவது : இயக்குநர் என்னை அழைத்து நீ ஹீரோ, புலியுடன் நடிக்க வேண்டும் என்றார். ஓகே சார் பண்ணிடலாம் என்றேன். யுவன் சார் மியூசிக் என்றார். ஆனால் ஷூட் ஒரு வருடம் ஆகும் என்றார். அப்புறம் ஒரு வருடம் கழித்து நிஜத்திலேயே புலியைக் கூட்டி வந்து, ஆம்புலன்ஸ் வைத்து நடிக்க வைத்தார்கள். ஒரிஜினல் புலியுடன் நடித்திருக்கிறேன்.
இப்படத்தை நம்பி முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. பல ஹீரோயின்கள் தயங்கிய போதும் கதையை நம்பி, என்னுடன் நடித்த ஷிரினுக்கு நன்றி. நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்று சில நடிகைகளிடம் சொல்லிவிட்டு, எனது ஜோடியாக நடிக்க முடியுமா என்று கேட்டபோது, எந்த பதிலும் சொல்லாமல், என்னை தங்களது மொபைலில் பிளாக் செய்துவிட்டனர். ஷிரின் கான்ச்வாலா மட்டுமே துணிச்சலுடன் நடித்தார் என்றார்.