சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் 'சைரன்'. 'பொன்னியின் செல்வன்' படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'இறைவன்' 'அகிலன்' படங்கள் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் அவர் நடித்துள்ள 'சைரன்' படம் வருகிற 16ம் தேதி வெளிவருகிறது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். சமுத்திரகனி, யோகிபாபு, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார்.
படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு ஜெயம் ரவி பேசியதாவது: எட்டிட்டர் ரூபன் மூலமாகத்தான் இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் அறிமுகமானார். அவர் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்ததால் உடனே ஒப்புக் கொண்டேன். படத்தை தயாரிக்க எனக்கு அம்மா போன்ற மாமியார் முன் வந்தார். ஒரு உயிரை காப்பாற்ற சில நொடிகள் முக்கியமானது. என்பதை சொல்லும் படம். முதன் முறையாக இரண்டு கெட்-அப்களில் நடித்திருக்கிறேன். இரண்டு விதமான டைம் லைன் இந்த படத்திற்கு தேவையானதாக இருந்தது.
இந்த படத்தின் ஜீவனே கிளைமாக்ஸ்தான். அந்த கிளைமாக்ஸை நோக்கியே காட்சிகள் நகரும். கோமாளி படத்திற்கு பிறகு யோகி பாபு படம் முழுக்க என்னோடு பயணிக்கிற கேரக்டர். உண்மையிலே இந்த படத்திற்கு கடுமையான உழைத்திருக்கிறேன். கஷ்டப்பட்டிருக்கிறேன். 75 நாட்கள் வரை படப்பிடிப்பு நடந்தது. முதலிலேயே இயக்குனரை நம்பி விட்டதால் எதிலும் தலையிடாமல் அவர் சொன்னதை செய்தேன்.
நான் புதுமுக இயக்குனர்களுக்கு நிறைய வாய்ப்புகள் வழங்குவதாக சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள்தான் எனக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கிச் செல்கிறார்கள், வளர்க்கிறார்கள். அவர்களின் உழைப்பு, திறமையை எனக்காக தருகிறார்கள். நான் வெறும் கருவிதான். என்றார்.