கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
2024 பிப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகளில் ஏழு படங்கள் வெளிவந்தன. இந்த ஆண்டு பிறந்து ஆறு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் ஆரவாரமான வெற்றி என்று சொல்லுமளவிற்கு எந்தப் படமும் வெளியாகவில்லை.
இந்த வாரம் பிப்ரவரி 16ம் தேதி ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'சைரன்' படம் வெளியாகிறது. அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்க, ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடித்துள்ள இந்தப் படத்திற்குப் போட்டியாக சக முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. சில பல சிறிய படங்களே வெளியாகிறது. அதனால், 'சைரன்' நன்றாக இருந்தால் அதன் சத்தம் அனைவருக்கும் கேட்க வாய்ப்புள்ளது.
இப்படத்துடன் ஜீவன், மல்லிகா ஷெராவத் நடித்துள்ள 'பாம்பாட்டம்', சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ள 'தி பாய்ஸ்', ஆகிய படங்களோடு 'ஆந்தை, எட்டும் வரை எட்டு, கழுமரம், பூ போன்ற காதல், எப்போதும் ராஜா' படங்களையும் சேர்த்து மொத்தம் 8 படங்கள் பிப்ரவரி 16ல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அறிவிக்கப்பட்டபடி வெளியானால் இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகப் படங்கள் வெளியாகும் நாளாக இருக்கும்.