நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சைரன்'. கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, அனுபமா பரமேஸ்வரன், சாந்தினி தமிழரசன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என தெரிவித்த இப்படம் ஒரு சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சைரன் படத்தை வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி அன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதே தேதியில் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் சிறப்பு வேடத்தில் ரஜினிகாந்த் இணைந்து நடித்துள்ள 'லால் சலாம்' படமும் பிப்ரவரி 9ந் தேதி திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். இதன்படி லால் சலாம், சைரன் படங்கள் நேருக்குநேர் மோதுகின்றன.