நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்து தமிழில் பிப்ரவரி 16ம் தேதி வெளியான படம் 'சைரன்'. இப்படத்தைத் தெலுங்கில் பிப்ரவரி 23ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. அதற்கான காரணம் என்ன என்பதையும் வினியோக நிறுவனம் தெரிவிக்கவில்லை.
கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் என்று நிறுவனம்தான் இப்படத்தின் தெலுங்கு வினியோகஸ்தர்கள். இவர்கள்தான் சிவகார்த்திகேயன் நடித்து தமிழில் வெளிவந்த 'அயலான்' படத்தையும் தெலுங்கில் வாங்கி வெளியிடுவதாக அறிவித்தார்கள். ஆனால், அப்படமும் இதுவரை வெளியாகவில்லை.
'சைரன்' படத்தில் தெலுங்கு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற கீர்த்தி சுரேஷ், அனுபமா நடித்திருப்பதால் அங்கும் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.
'அயலான்' படம் ஓடிடியில் வெளிவந்துவிட்டது. ஆனால், தெலுங்குப் பதிப்பு இன்னும் வெளியாகவில்லை. 'சைரன்' படத்தின் நிலை என்ன என்பது இனிமேல்தான் தெரிய வரும்.