நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

‛நானும் ரவுடி தான்' படம் உருவான சமயத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே காதலர் மலர்ந்தது. பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் 2022ல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். குழந்தைகளுக்கு உயிர், உலக் என பெயரிட்டுள்ளனர்.
காதலர் தினத்தை உலகெங்கும் உள்ள காதலர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் காதலர் தினத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛என் தங்கத்துடன் ஒரு சகாப்தத்தை முடித்து விட்டேன். நீ என் உயிராகவும், நான் என் உலகமாகவும் இருந்த நிலையில் தற்போது நமக்கு உயிர் மற்றும் உலக் கிடைத்துள்ளனர். ஒவ்வொரு காதலர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்'' என குறிப்பிட்டு நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
அதேப்போல் நயன்தாரா தனது குழந்தைகளுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.