த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் |
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. சினிமா இயக்குனரான இவர், இமாச்சல் பிரதேசத்திற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்றார். திரும்பும் வழியில் சாலையில் ஏற்பட்ட விபத்தில் இவர் பயணித்த கார் சட்லஜ் நதியில் விழுந்தது. இதில் மாயமான வெற்றி எட்டு நாட்களுக்கு பின் நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள்நடந்தன.
முன்னதாக வெற்றி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்கள் சிலரும் அஞ்சலி செலுத்தினர். நடிகர் அஜித்தும் வெற்றி குடும்பத்தாருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் ரஜினி சென்னையில் உள்ள சைதை துரைசாமி வீட்டிற்கு சென்று அவருக்கும், குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.