செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
2023ம் வருடம் தெலுங்கில் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற படம் 'மேட்' (Mad) . இப்படத்தில் ஸ்ரீ கவுரிப்ரியா, அனந்திகா சனில்குமார் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். அப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அவர்கள் நாளை(ஜன., 9) வெளியாக உள்ள 'லவ்வர், லால் சலாம்' தமிழ்ப் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிக்க காத்துள்ளார்கள்.
ஸ்ரீ கவுரிப்ரியா 'மேட்' படம் தவிர கடந்த வருடம் வெளியான ஓடிடி வெப் சீரிஸ் ஆன 'மாடர்ன் லவ் சென்னை'யில் நடித்துள்ளார். 'லவ்வர்' படத்தின் டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பால் தனக்கு தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்.
அனந்திகா சனில் குமார் கடந்த வருடம் வெளியான 'ரெய்டு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதற்கு முன்பாக 2022ல் வெளிவந்த 'ராஜமுந்திரி ரோஸ்மில்க்' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிவிட்டார். அதன்பின் 'மேட்' படத்திலும் நடித்தார். இப்போது 'லால் சலாம்' படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நடித்துள்ளார்.
'மேட்' படத்தில் ஒன்றாக நடித்த கவுரிப்ரியா, அனந்திகா நாளை தமிழில் எதிரும் புதிருமாக போட்டியை சந்திக்க உள்ளார்கள்.