‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

1980களில் அறிமுகமான முக்கியமான இசை அமைப்பாளர்களில் ஒருவர் விஜய் ஆனந்த். நாணயம் இல்லாத நாணயம், ஊருக்கு உபதேசம், ராசாத்தி வரும் நாள் உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தார். ரஜினி நடிப்பில் 1986ல் வெளியான 'நான் அடிமை இல்லை' படத்தில் இடம்பெற்ற 'ஒரு ஜீவன் தான், உன் பாடல் தான்..' என்ற மனதை உருக்கும் பாடல் இவர் இசை அமைப்பில் உருவானது. தமிழில் வாய்ப்புகள் குறையவே கன்னட படங்களுக்கு இசை அமைத்தார். கன்னடத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார்.
கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த விஜய் ஆனந்த் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கு பெருங்களத்தூரில் நடந்தது.




