மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் விஜய் தான் அரசியலில் நுழைவதாக அறிவித்து தமிழக வெற்றி கழகம் என்கிற தனது கட்சி பெயரையும் சமீபத்தில் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு திரை உலகில் இருந்து எதிர்பார்த்த பல நபர்களிடமிருந்து எந்த விதமான வரவேற்பு மற்றும் எதிர்ப்பு ரியாக்சன் என எதுவும் வெளிப்படவில்லை. இந்த நிலையில் தற்போது நடைபெறும் திரைப்பட விழாக்களிலும் கூட விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசுவது துவங்கியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், விஜய் மேடையில் நின்று தனது ஆட்கள் மூலமாக வெறும் அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டிருந்தால் பத்தாது களத்தில் இறங்கி மக்களை சந்திக்க வேண்டும் என்று சில விமர்சனங்களை முன் வைத்தார்.
அதன்பிறகு பேசிய இயக்குனர் பேரரசு, விஜய்க்கு ஆதரவாக தனது கருத்துக்களை கூறினார். குறிப்பாக ‛‛இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை. விஜய் ஒரு நல்ல தலைவராக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். நான் எப்போதும் விஜய்யின் விசுவாசி தான்'' என பொது மேடையிலேயே ஓப்பனாக பேசினார் பேரரசு.
இத்தனைக்கும் அவர் பா.ஜ., கட்சியில் பொறுப்பில் இருந்தாலும் தன்னை திரையுலகில் ‛திருப்பாச்சி' படம் மூலம் அறிமுகப்படுத்தி மீண்டும் ‛சிவகாசி' என்கிற இன்னொரு பட வாய்ப்பையும் தனக்கு கொடுத்ததற்காக நன்றி உணர்வுடன் தனது விசுவாசத்தை பேரரசு வெளிப்படுத்தியுள்ளார் என்றே தெரிகிறது.