வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விஷ்ணு விஷால், விக்ராந்த், சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் விஷ்ணு விஷால், ரஜினிகாந்த்தின் பெருந்தன்மை பற்றியும், அவர் எவ்வளவு சிறந்த ஒரு மனிதர் என்பது பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.
ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இயக்குனரும், நடிகருமான நட்ராஜ். இவர் ரஜினிகாந்த் நடித்த 'அன்புள்ள ரஜினிகாந்த், வள்ளி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர். தனது நண்பரின் பெயரை தனது மகளுக்கு 'ரஜினி' என்று வைத்தவர். இந்த ரஜினியை காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர் விஷ்ணு விஷால். 2010ல் திருமணம் செய்து கொண்டவர்கள் 2018ல் பிரிந்துவிட்டார்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.
'லால் சலாம்' படத்தில் விஷ்ணு விஷாலை நடிக்க வைக்க ரஜினியின் மகள் ஐஸ்வர்யா முடிவெடுத்திருக்கிறார். தனது நெருங்கிய நண்பரான நட்ராஜின் மகளைத் திருமணம் செய்து கொண்டு பின் பிரிந்த விஷ்ணு விஷால் இப்படத்தில் நடிப்பதில் ரஜினிக்கு ஒரு தயக்கம் இருந்திருக்கிறது. அதனால், தனது நண்பரின் மகளான ரஜினிக்கு போன் செய்து விஷ்ணு விஷால் நடிக்க உள்ளது பற்றிய தகவலைத் தெரிவித்து, அவர் அது பற்றி எதுவும் நினைக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட பின்பு படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
இது பற்றிய தகவலை நேற்றைய நிகழ்வில் எப்படி சொல்வது என்று தெரியாமல் குழம்பி ஒரு வழியாக சொல்லி முடித்தார் விஷ்ணு விஷால். இதை எப்படி வெளியில் சொல்வது என்று விஷ்ணு விஷால் தவித்த தவிப்புதான் அவரது பேச்சுத் தடுமாற்றத்திற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
விஷ்ணு விஷால் பேசுகையில்,
“ரஜினிகாந்த் சார் மிகச் சிறந்த ஒரு மனிதர். அது, ஏன்னு இந்த இடத்துல நான் சொல்லணும்னு நினைக்கிறேன். நிறைய பேர் அதை வெளிய சொல்லாதீங்கன்னு சொன்னாங்க. ஆனா, அதை நான் பதிவு பண்ணனும்னு நினைக்கிறேன். இது கொஞ்சம் பர்சனல்தான். இந்தப் பட வாய்ப்பு வரும் போது, எனக்கு ஒரு போன் கால் வருது. என் பையனோட அம்மா என்கிட்ட பேசுறாங்க. இந்தப் படம் பண்றியான்னு கேட்டாங்க. உனக்கு எப்படி தெரியும்னு கேட்டேன்.
“என் பொண்ணு, இந்த கதாபாத்திரம் விஷ்ணு பண்ணா நல்லாருக்கும்னு சொன்னா. நானும், இந்தப் படத்துல நடிக்கிறேன், உனக்கு ஓகே-வாம்மான்னு,” ரஜினி சார் என் மகனோட அம்மா கிட்ட சொல்லியிருக்காரு.
அதை நான் மறக்கவே மாட்டேன், ரஜினி சார் அவர் நண்பரோட பொண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதைக் கேட்டிருக்காரு பாருங்க. அதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் அவர் சூப்பர்ஸ்டாரா இருக்கக் காரணம். அவர் நண்பரை மதிச்சி, அவங்க பொண்ணை மதிச்சி கூப்பிட்டு கேட்டிருக்காரு.
இதை நான் சொல்லணுமா இல்லையான்னு எனக்குத் தெரியாது, ஆனா நான் சொல்லணும்னு நினைக்கிறேன். அவர் சூப்பர் ஸ்டாரா இருக்கிறதுக்குக் காரணம் அந்த மனசுதான். அவர் அதைக் கேட்டாருங்கறதுக்கு நான் பெருமைப்படுறேன். அந்த வேல்யூ கொடுத்திருக்காரு பாருங்க. இது ஒரு எமோஷனல் படம் எனக்கு, அங்க இருந்துதான் ஸ்டார்ட் ஆச்சு.
என் பையனோட அம்மாவும் எனக்கு விஷ் பண்ணாங்க, ரொம்ப சந்தோஷம், ரஜினி சார் கிட்ட சொன்னேன், அதெல்லாம் ஒண்ணும் கிடையாது, சூப்பர் சார் அப்படின்னு சொன்னேன், ஆல் த பெஸ்ட், நல்லா பண்ணுன்னு சொன்னாங்க,” என ரஜினிகாந்த்தின் பெருந்தன்மை பற்றியும் தனது மகனின் அம்மா ரஜினியின் பெருந்தன்மை பற்றியும் நெகிழ்வாகப் பேசினார்.