ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் | வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் | ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி | முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் |
புதிய அரசியல் கட்சிக்கான பணியை ஆரம்பித்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார் நடிகர் விஜய். தற்போது நடித்து வரும் 'கோட்' படத்திற்குப் பிறகு அவருடைய 69வது படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடப் போவதாக அவரே அறிவித்தும் விட்டார்.
இந்நிலையில் விஜய்யின் 69வது படத்தைத் தெலுங்கு தயாரிப்பாளரான 'ஆர்ஆர்ஆர்' படத் தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிக்கப் போகிறார் என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகி உள்ளது. அப்படத்திற்கான இயக்குனர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார்கள்.
இருந்தாலும் விஜய்யை வைத்து படத்தை இயக்க சில இயக்குனர்கள் ஏற்கெனவே பேசி வந்ததாகத் தற்போது தகவல் வெளியானது. விஜய் நடிக்க 'தெறி, மெர்சல், பிகில்' படங்களை இயக்கிய அட்லீ, அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு' படங்களை இயக்கிய வினோத் ஆகியோர் கதை சொன்னதாக ஒரு தகவல் வெளியானது. வினோத் சொன்ன கதை ஒரு அரசியல் கதை என்கிறார்கள்.
அவர்களோடு தெலுங்கு இயக்குனரான கோபிசந்த் மலினேனி கூட விஜய்யிடம் கதை சொல்லியிருக்கிறார் என்று ஒரு தகவல். இவர் பாலகிருஷ்ணா நடித்த 'வீர சிம்ஹா ரெட்டி', உள்ளிட்ட சில தெலுங்குப் படங்களை இயக்கியவர். அதிரடி ஆக்ஷன் படங்களின் ஸ்பெஷலிஸ்ட் இவர். நேற்று விஜய்யின் கட்சி பற்றிய அறிவிப்பு வந்ததும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதனால், இவரும் விஜய் 69 இயக்குனர் போட்டியில் உள்ளார்.
விஜய்யின் 69வது படத்தைத் தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கிறார் என்றால் தெலுங்கு இயக்குனர் இயக்குவதில் ஆச்சரியமில்லை.