இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

'வாரிசுகள்' என்று சொன்னாலும் அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி வெற்றி என்பது தானாக வந்துவிடாது. அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும், அதற்கான நேரமும் வர வேண்டும். அப்போதுதான் பெயரும் கிடைக்கும், புகழும் கிடைக்கும்.
80களில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் மற்றும் நடிகர்களாக விளங்கியவர்கள் பாக்யராஜ், டி ராஜேந்தர், பாண்டியராஜன். இவர்களில் டி ராஜேந்தர் மகன் கதாநாயகனாக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுவிட்டார். ஆனால், பாக்யராஜ் மகன் சாந்தனு, பாண்டியராஜன் மகன் பிரித்வி ஆகியோர் சில படங்களில் கதாநாயகனாக நடித்தாலும் அவர்களுக்கான பெரிய வரவேற்பு கிடைக்காமல் இருந்தது. பாக்யராஜிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்தான் பாண்டியராஜன் என்பது சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
தற்போது இருவரது வாரிசுகளும் ஒரே படத்தில் பெயரையும், வரவேற்பையும் பெற்றுவிட்டார்கள். 'ப்ளூ ஸ்டார்' படத்தில் நடித்த சாந்தனு, பிரித்வி இருவரது நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இருவருக்குமே இப்படம் திருப்புமுனையான படமாக அமைந்துள்ளது. இந்த வரவேற்பை வரும் காலங்களில் அவர்கள் தக்க வைத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். மகன்களின் வெற்றி அவர்களது அப்பாக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.
“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்,” என திருக்குறளைப் பதிவிட்டு தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் பிரித்வி.
“எனது அப்பா, எனது முதல் ஹீரோ. மக்களே… எனது அப்பாவை அவரது இதயத்தின் அடியிலிருந்து மகிழ வைத்ததற்கு நன்றி. 'ப்ளூ ஸ்டார்' படத்திற்கான உங்கள் வரவேற்பும், ஆதரவும்தான் இதை நிகழ்த்தியது, எப்போதுமே நன்றியுடன்,” என சாந்தனு பதிவிட்டுள்ளார்.