இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் சில முக்கியமான வெற்றிப் படங்களை வினியோகம் செய்தவர் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் சிறிய படங்களையும் வினியோகம் செய்து வெற்றி பெற வைத்துள்ளார்.
கடந்த வருடம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வரவேற்பையும் பெற்ற 'குட்நைட்' படத்தைத் தயாரித்த நிறுவனம் தற்போது 'லவ்வர்' என்ற படத்தைத் தயாரித்துள்ளது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் மணிகண்டன், ஸ்ரீகவுரி ப்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
'லவ்வர்' படத்தைப் பார்த்துள்ள சக்திவேலன் அப்படம் பற்றி, “கடந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படமான 'குட்நைட்' படத்தைத் தயாரித்தவர்களின் 'லவ்வர்' படத்தைப் பார்த்தேன். சமகாலத்திய அற்புதமான காதல் திரைப்படம். இப்படத்தில் உள்ள காட்சிகள் இன்றைய இளம் தலைமுறையினரைத் தொடர்புபடுத்தி, அவர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்கும். மணிகண்டனின் அற்புதமான நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும், அவரது ஏற்ற, இறக்கமான குரல் அவற்றை இன்னும் அதிகமாக்குகிறது. ஷான்ரோல்டனின் இசை உணர்வுபூர்வமாக உள்ளது. எனது வார்த்தையை குறித்துக் கொள்ளுங்கள். 2024ம் ஆண்டின் பெரிய பிளாக்பஸ்டர் படமாக 'லவ்வர்' கண்டிப்பாக இருக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.