ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கேப்டன் மில்லர், மற்றும் மிஷன் சேப்டர் 1 படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற கருத்துகளால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஸ்டன்ட் சில்வா. தமிழ், தெலுங்கு, மலயாளம், கன்னடம், ஹிந்தி, மராட்டி, பெங்காலி மற்றும் சிங்களம் என பல மொழிகளிலும் 300 படங்களுக்கு மேலாக சண்டை பயிற்சியாளராக பணியாற்றி பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
அஜித் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். அதன் பிறகு 'என்னை அறிந்தால்' படத்திற்கு சண்டை அமைத்தார். சில படங்களில் வில்லனாகவும் நடித்தார். 2022ம் ஆண்டு 'சித்திரை செவ்வானம்' என்ற படத்தை இயக்கினார். சமுத்திரக்கனி, சாய் பல்லவியின் தங்கை பூஜா நடித்திருந்தார்கள். சண்டை இயக்குனர் இயக்கிய படம் என்றாலும் சமூகத்தில் பெண் பிள்ளைகளை எவ்வாறு பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்ற கருத்தை சொன்ன படம்.
இந்த நிலையில் தான் அடுத்து இயக்கப்போகும் படம் பற்றி விரைவில் அறிவிக்க இருக்கிறார். இது ஹாலிவுட் பாணியிலான அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்கிறார் சில்வா. விஜய், அஜித் இருவரிடமும் கதையை சொல்லிவிட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறார். ஒரு வேளை இருவரும் ஒத்துக் கொள்ளவில்லை என்றால், அந்த கதையை அருண் விஜய்யை வைத்து இயக்குவார் என்று தெரிகிறது.




