ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
இது என்ன மாயம், சில சமயங்களில் உள்ளிட்ட படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய பவானிஸ்ரீ, க.பெ.ரணசிங்கம் படத்தின் மூலம் நடிகை ஆனார். அதன் பிறகு 'பாவ கதைகள்' என்ற அந்தாலஜி படத்தில் நடித்தார். 'விடுதலை' படத்தில் தமிழரசி கேரக்டர் மூலம் புகழ்பெற்றார். தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதுதவிர 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தில் நடிக்கிறார்.
விடுதலை படத்தில் நடித்து நன்றாக பெயர் எடுத்து விட்டதால் வாய்ப்புகள் அடுத்தடுத்து வரும் என்று நினைத்தார். ஆனால் அவரை தேடி வந்த வாய்ப்புகள் அவருக்கு திருப்தி தரும் கதைகளாக அமையவில்லை. இதனால் நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறார். அதேசமயம் தனியாக போட்டோ ஷூட் நடத்தி அந்த படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தை ஆனந்த் இயக்குகிறார். ஆனந்த் ராம், மிர்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.