விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு |
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் ஜனவரி 12ம் தேதி திரைக்கு வந்த படம் அயலான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படம் 75 கோடி வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் அளித்துள்ள ஒரு பேட்டியில், அயலான் படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் தன்னை பாராட்டியதாக தெரிவித்திருக்கிறார்.
'நீங்கள் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறீர்கள். வித்தியாசமான படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்' என்று ரஜினிகாந்த் கூறியதாக அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதையடுத்து ரஜினி இடத்தில் நீங்கள் நடித்த எந்திரன், 2.0 போன்ற படங்கள்தான் என்னை போன்றோருக்கு உந்துதலாக இருந்தது என்று நான் கூறியபோது, இப்போது உங்களைப் போன்றோர்தான் எங்களுக்கு உந்துதலாக இருக்கிறீர்கள் என்று ரஜினி கூறியதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.