சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

இயக்குனர் சீனு ராமசாமி தனது படங்களை திரைப்பட விழாக்கள் மூலம் சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதை வழக்கமக கொண்டுள்ளார். இதற்கு முன்பு அவர் இயக்கிய மாமனிதன் படம் உலகம் முழுக்க பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளையும் பெற்றுள்ளது. தற்போது அவர் இயக்கி முடித்துள்ள 'இடிமுழக்கம்' படம் புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் இயக்குனர் சீனு ராமசாமியும், கதையின் நாயகன் ஜி.வி.பிரகாசும் கலந்து கொண்டுள்ளனர்.
சீனுராமசாமி கூறும்போது, “இடிமுழக்கம் படம் பழிவாங்கும் உணர்ச்சியை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படம் திரைக்கு வரும் முன்பே புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்து திரையிட்டு பார்வையாளர்களிடம் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தை இந்தியாவில் நடைபெறும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட அனுப்பி வைக்க இருப்பதாக புனே சர்வதேச திரைப்பட விழாக்குழு அறிவித்து இருக்கிறது'' என்றார்.
இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், காயத்ரி சங்கர், சரண்யா பொன்வண்னன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். அசோக்குமர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்கைமேன் பிலிம்ஸ் சார்பில் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். ஏப்ரல் மாதம் படம் தியேட்டர்களில் வெளியாகிறது.




