குட் பேட் அக்லி டிரைலர் இன்று வெளியாகிறது | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
ஒரு காலத்தில் இளம் தமிழ்ப் பெண்களின் ஆஸ்தான ஆடையாக இருந்த பாவாடை தாவணியை இப்போது பார்ப்பதே அரிதாகிவிட்டது. சில திருமண நிகழ்வுகளில் மட்டும் அதையும் ஒரு பேஷன் ஆடையாக வடிவத்தை மாற்றிவிட்டார்கள்.
'பீஸ்ட்' கதாநாயகியான பூஜா ஹெக்டே, கர்நாடகாவைச் சேர்ந்தவர், மும்பையில் செட்டிலானவர். எப்போதுமே கிளாமரான மாடர்ன் உடையில்தான் போட்டோஷுட் செய்வார். நேற்று பாவாடை தாவணியில் ஒரு போட்டோ ஷுட் எடுத்து புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். தென்னிந்தியப் பெண்களுக்கே உரிய அழகு அந்த ஆடையில் வெளிப்பட்டது.
தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க வைக்க அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். ஹிந்தியில் பிரபலமாகத் துடிக்கும் பூஜா, மீண்டும் தமிழ்ப் பக்கம் வருவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.