மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விஷ்ணு விஷால், விக்ராந்த் கதாநாயர்களாக நடிக்க, சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'லால் சலாம்'.
இப்படத்தின் இசை வெளியீடு வரும் ஜனவரி 26ம் தேதி மாலை சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.
நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு 'குட்டி கதை' சொல்வார் என அறிவித்துள்ளார்கள். இதற்கு முன்பு தான் நடித்த 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ரஜினிகாந்த் சொன்ன 'காக்க, கழுகு' கதை சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் அவரது ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் மோதல் ஆரம்பமாகி நடந்து வருகிறது.
'லால் சலாம்' இசை வெளியீட்டில் என்ன குட்டி கதை சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தப் போகிறாரோ ?.