குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
விஜய் சேதுபதி முதன்முதலாக நாயகனாக நடித்த தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தை இயக்கியவர் சீனு ராமசாமி. அதன் பிறகு அவர்களது கூட்டணியில் இடம் பொருள் ஏவல், தர்மதுரை, மாமனிதன் போன்ற படங்கள் உருவாகி உள்ளன. இதில், இடம் பொருள் ஏவல் கிடப்பில் கிடக்கிறது. தர்மதுரை 2016ம் ஆண்டு வெளியானது. மாமனிதன் படம் வருகிற ஜூன் 24 ஆம் தேதி வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில் சீனுராமசாமி கூறுகையில், ‛‛2011ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த மன்மதன் அம்பு படம் வெளியான அதே நாளில் தான் விஜய் சேதுபதியை வைத்து நான் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படமும் திரைக்கு வந்தது. அப்போது சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு நானும், விஜய் சேதுபதியும் பைக்கில் சென்று எங்களது படத்தை பார்க்க ரசிகர்கள் டிக்கெட் எடுக்கிறார்களா? என்பதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம். அப்போது அந்த தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த கமல்ஹாசனின் கட்-அவுட்டை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தார் விஜய் சேதுபதி. அப்படிப்பட்ட விஜய்சேதுபதி இப்போது கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி பெற்று உள்ளார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.